மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ocean sunfish என்றழைக்கபப்டும் அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
2,000 கிலோ எடை வரை வளரக்க்கூடிய சூரிய மீன்கள் தென் அமெரிக்க நாடுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன.
4 ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கியுள்ள சூரிய மீனை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
இதனை கேள்விப்பட்டு பாம்பன் துறைமுகம் வந்த கடல்சார் ஆராய்ச்சியாளர்கள், பிடிபட்ட சூரிய மீன் 57 கிலோ எடை இருந்ததாக தெரிவித்தனர்.