பிரித்தானியாவில் இரவு பார்ட்டி விருந்திற்கு செல்வதற்கு முன்பு கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்து இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிரிஸ்டல் கல்வி நிறுவனத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடப்பிரிவை பயின்று வந்த ஜெஸ் டேவிஸ் (Jess Davis)20, வரவிருக்கும் தனது பிறந்தநாள் தொடர்பான இரவு பார்ட்டிக்கு செல்வதற்கு முன்பாக கழிவறையை பயன்படுத்திய போது ஆச்சிரியமூட்டும் விதமாக குழந்தை ஒன்றை பெற்று எடுத்துள்ளார்.
கருவுற்று இருப்பது தொடர்பான எந்தவொரு சமிக்கைகளையும் உணராத ஜெஸ் டேவிஸ், தனக்கு ஏற்பட்ட வயிற்று வலியையும் வழக்கமான மாதவிடாயின் தொடக்க நாள்களில் ஏற்படும் வலி என்று கருதியதாகவும், ஆனால் கழிப்பறையில் பிறந்த குழந்தையின் அழுக்குரல் கேட்ட பின்பே தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தாக தெரிவித்துள்ளார்.
இதுத் குறித்து ஜெஸ் டேவிஸ் தெரிவித்துள்ள கருத்தில், நான் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான இரவு பார்ட்டிக்காக தயாராகி கொண்டு இருந்தேன், அப்போது தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டதால், மாதவிடாய் ஆரம்பம் ஆகிவிட்டது எனக் கருதி அருகில் உள்ள அங்காடியில் சூடான வாட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்தேன்.
ஆனால் வாட்டர் பாட்டிலை வாங்கி விட்டு என்னால் வீட்டிற்கு நடக்க முடியவில்லை, விட்டிற்கு வந்த பின்னும் என்னால் படுக்கையில் படுக்க முடியவில்லை.
இருப்பினும் இரவு பாட்டிற்கு செல்லவேண்டியது இருந்ததால், கழிவறைக்கு சென்று தயாராக நினைத்தேன், அப்போது ஏற்பட்ட தாங்க முடியாத வலியால் கழிவறையின் இருக்கையில் அமர்ந்து எனக்கு அழுத்தம் தரவேண்டும், எப்படியாவது வயிற்றில் உள்ளதை வெளியே தள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
சிறிது நேரத்தில் ஏதோ வெளியேறியதாக உணர்ந்தேன், ஆனால் குழந்தையின் அழுக்குரல் கேட்கும் வரை எனக்கு குழந்தை பிறந்துள்ளது என்பது தெரியாது.
உடனடியாக எனது தோழி லிவ் கிங், 20 தகவலை தெரியபடுத்தினேன், எனக்கு குழந்தை பிறந்து உள்ளதை நினைத்து முதலில் அதிர்ச்சி அடைந்தேன், ஆனால் தற்போது மகிழ்ச்சியாக தான் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
தோழி லிவ் கிங்க் ஜெஸ் டேவிஸை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததை தொடர்ந்து, குழந்தை இன்குபேட்டரில் வைத்து பாரமரிக்கப்பட்டதுடன், தாயிற்கும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவை மூன்றே நிமிடத்தில் தாக்கும் அணுஆயுத ஏவுகணை: புடினின் பகிரங்க எச்சரிக்கை!
தற்போது இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை வளாகம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.