இன்றைய காலகட்டத்தில் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது சினிமாத் துறை தான். இந்த சினிமா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் ஆகும்.
இந்த இரு பெரும் நிறுவனங்களும் போட்டி போட்டி போட்டுக் கொண்டு விரிவாக்கம் செய்து வந்தன.
709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..!
ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு மொத்தமும் தலை கீழாய் மாறி போனது எனலாம். நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனங்கள் பெரும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளன.
வருவாய் வீழ்ச்சி
கொரோனாவிற்கு பிறகு மக்கள் அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு செலவு செய்வதை குறைத்துள்ளனர் எனலாம். இதனால் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களின் வருவாய் சரிவினைக் கண்டுள்ளது. இப்படி பல நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தான், நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இணைப்பு குறித்து அறிவிப்பு
இப்படி நெருக்கடியான நிலைக்கு மத்தியில் தான் பி வி ஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள், தங்களது வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் இணைப்பு நடவடிக்கை குறித்தான அறிவிப்பினை சமீபத்தில் கொடுத்தன.
அனுமதி
இவ்வாறு இணைந்து செயல்படுவதன் மூலம் லாபம் அதிகரிக்கும். தொடர்ந்து விரிவாக்கம் செய்வதும் எளிதாக செய்ய முடியும். மொத்தத்தில் லாபகரமான வளர்ச்சி பாதை கொண்ட நிறுவனத்தினை உருவாக்க முடியும் என்றும் கூறியிருந்தன. இந்த நிலையில் இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைக்கு பி எஸ் இ மற்றும் என் எஸ் இ எக்ஸ்சேஞ்ச்- களும் அனுமதி கொடுத்துள்ளன.
நோ அப்ஜக்சன்
இதனை உறுதிபடுத்தும் விதமாக நோ அப்ஜக்சன் (No Objection) கடிதத்தினையும் கொடுத்துள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடைமுறைக்கு வரும் பட்சத்தில் பவர் குமார் ஜெயின் ஜெயின் நிர்வாகமற்ற தலைவராகவும், அஜய் பிஜிலி நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இன்றைய பங்கு விலை?
இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் ஐநாக்ஸ் பங்கு விலையானது கிட்டதட்ட 1% அதிகரித்து, 486.35 ரூபாயாக ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.
இதே பி வி ஆர் லிமிடெட் பங்கு விலையானது 0.67% ஏற்றம் கண்டு, 1794.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
BSE, NSE approves PVR – INOX merger: it will replace multiplex business
BSE and NSE exchanges have approved the merger of PVR and Inox.