பூப்போல மனசு.. ஏறாத வயது… தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் தளபதி விஜய் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ்’ ஆபீஸ் வசூல் நாயனாக வலம் வருகிறார்.

இன்று தளபதி விஜயின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும் சென்னையில் விஜயின் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திரைத்துறை பிரபலங்கள் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் பூப்போல மனசு ஏறாத வயது கோலிவுட்டின் வாரிசு தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பதிவில் ஹேப்பி பர்த்தேட விஜய் அண்ணா சூப்பர் ஸ்டைலிஷ் வாரிசு இயக்குநர் வம்சி மற்றும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நேற்று வெளியான வாரிசு படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்டு அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா என்று பதிவிட்டுள்ளார்.

.இயக்குநர் விக்னேஷ சிவன் தனது ட்விட்டர் பதிவில், எப்போதும் வியக்க வைக்கும் தளபதிவிஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் அழகான வாழ்வு உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பதிவில். எங்கள் அன்பான தளபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிகவும் பணிவான சிறந்த மனிதர் என்று பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்ர் பக்கத்தில், அன்புள்ள தளபதி சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டாசு வெடிக்க தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார் இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை அமையட்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புள்ள தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள ஐயா உங்கள் பணிவு, தன்னம்பிக்கை, நிலைத்தன்மை, கவர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நண்பராகவும், சகோதரனாகவும், வாழ்நாள் முழுவதும் நலம் விரும்புபவராகவும் இருப்பதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

ஒருவரின் பிறந்தநாளை ஒரு பண்டிகையாக உணரும்போது அவர்களின் மகத்துவம் உங்களுக்குத் தெரியும்! அனைத்து இதயங்களின் ‘மாஸ்டர்’ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம் என நடிகை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.