பெங்களூரு: பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி இருந்த 4 மணி நேரத்திற்கு மட்டும் ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூருவில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி 20ம் தேதி கர்நாடகா வந்தார். 12 மணிக்கு வந்து 4.30 மணிக்கு மைசூருவுக்கு புறப்பட்டு சென்றார். பெங்களூருவில் இந்திய அறிவியல் கழகம், பொருளாதார பல்கலைக்கழகம், கொம்மகட்டாவில் திட்ட பணிகள் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக 20-ம் தேதி பகல் 12 மணியளவில் பெங்களூரு வந்த அவர் நகரில் 4 மணி நேரம் மட்டுமே இருந்தார்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி சென்ற சாலைகளில், மேடு பள்ளம் இல்லாதவகையில் புதிதாகத் தார்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.14 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற பணிகளுக்காக ரூ.10 கோடி கோடியும் என ரூ.24 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பெங்களூரு மாநகராட்சி நிர்வாக அதிகாரி, கமிஷ்னரின் நிதியிலிருந்து பணம் எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரதமரின் 4 மணி நேர வருகைக்காக மட்டும் ரூ. 24 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.