ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் அறிக்கையில், மக்கள் தாங்கள் விரும்பும் வேலைகளை செய்யக்கூடிய எதிர்காலத்தினை நோக்கி செல்லவுள்ளோம்.
பேஸ்புக்கில் ரீல்ஸ்ப்ளே போனஸ் திட்டத்தினை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.11.2 கோடி சம்பளமா.. சராசரியே இப்படின்னா ரியல் சம்பளம் எவ்வளவு.. இந்திய CEO-களுக்கு ஜாக்பாட்!
எப்படி சம்பாதிக்கலாம்?
பேஸ்புக்கில் படைப்பாளிகளுக்கு உதவும் வகையில் பேஸ்புக் ஸ்டார்ஸ் என்ற பெயரில் பயனர்கள் ரீல்ஸ், லைவ் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்கள் இனி பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் அல்ல, வருமானத்துடன் கூடிய தங்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்ய முடியும்.
வருமானம் பெற வழி?
மேலும் பேஸ்புக் தற்போது வருமானம் கொடுத்து வரும் சில கருவிகளை விரிவாக்கம் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளார் என டெக் கிரன்ச் செய்தி தரவுகள் கூறுகின்றது.
இன்ஸ்டாவிலும் புதிய திட்டமா?
இன்ஸ்டாகிராமிலும் வருமானம் கொடுக்க கூடிய அம்சங்களை பரிசோதித்து வருவதாகவும், அங்கும் கிரியேட்டர்களுக்கு பணம் செலுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார். மொத்தத்தில் டிக் டாக் போன்றோ அல்லது யூடியூப் போன்றே பயனர்களுக்கு இது வருமானம் அளிக்கும் தளமாக மாறலாம். இதனால் பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கையும் விரிவடையலாம்.
Interoperable சந்தாக்கள்
ஆக மொத்தத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பயனர்களுக்கு 5 முக்கிய அமசங்களை பற்றி பேஸ்புக் தெரிவித்துள்ளது.
Interoperable சந்தாக்கள்: இந்த அம்சம் கிரியேட்டர்கள் தங்கள் பணம் செலுத்தும் சந்தாரர்களை, மற்ற பேஸ்புக் குழுக்கான அணுகலையும் வழங்க அனுமதிக்கும்.
பேஸ்புக் ஸ்டார்ஸ்
பேஸ்புக் ஸ்டார்ஸ்: பேஸ்புக் தகுதியுள்ள அனைத்து கிரியேட்டர்களுக்கும், ஸ்டார்ஸ் எனப்படும் சிறப்பு அம்சங்கத்தினை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதனால் வீடியோக்கள், லைவ், VOD வீடியோக்கள் மூலம் அதிகம் சம்பாதிக்க தொடங்கலாம் என தெரிவித்துள்ளது.
Monetizing Reels
திறமையான கிரியேட்டர்களுக்கு போனஸ் போன்ற திட்டத்தினையும் பேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ளது, இது இன்ஸ்டாகிராமில் செய்யும் போஸ்ட்டுகளையும், பேஸ்புக்கில் ஷேர் செது அதன் மூலமும் வருமானம் பெற அனுமதிக்கும்.
கிரியேட்டர் மார்க்கெட் ப்ளேஷ்
இன்ஸ்டாகிராமில் ஒரு செட் இடத்தினை சோதனை செய்ய தொடங்கியுள்ளதாகவும், இங்கு கிரியேட்டர்களை கண்டுபிடித்து பணம் பெற காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் சேகரிப்புகள்
கடைசியாக இன்ஸ்டாகிராமில் display NFTsகளுக்கான ஆதரவினை நிறுவனம் விரிவுப்படுத்தும். இந்த அம்சத்தினை விரைவில் பேஸ்புக்கிலும் கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளது. மொத்தத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டுள்ளது என கூறலாம். எனினும் இது அமலுக்கு வர சிறிது காலம் ஆகலாம். இது குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இதுவரை வெளியிடவில்லை. இது டெக் கிரன்ச் தளத்தில் வெளியான செய்தியினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
mark zuckerberg shares new ways for creators to earn more money on FB and insta
It has been reported that Mark Zuckerberg has stated that he intends to create opportunities for users to make money on Facebook and Instagram.