அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து ஒபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொதுக்குழுவை ஏன் புறக்கணிக்க வேண்டும், இன்று மாலை ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பிறகு பொதுக் குழுவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
ஓபிஎஸ் உடன் ஆலோசனை செய்து விட்டு வெளியே வந்த வைத்திலிங்கத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்க அவர் அளித்த பதிலை இங்கு காணலாம்.
கேள்வி – நாளைய பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பீர்களா?
வைத்தியலிங்கம் – நாங்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் பங்கேற்பதாக முடிவு செய்துவிட்டோம்.
கேள்வி – ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா?
வைத்தியலிங்கம் – நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.
நாளை நடைபெறும் பொதுக்குழவில் காரசார விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரியவருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM