போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றம்: ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்

போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழந்துள்ளதாக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பெரும் முதலீடாக கருதி பலரும் கிரிப்டோகரன்சியில் தற்போது தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலியான இணையத்தளங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் 1,000 கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது.

image
கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என போலியான இணையதளங்களை மோசடி நபர்கள் உருவாக்கி, இதுதான் சட்டபூர்வமாக கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என விளம்பரம் செய்கின்றனர். இந்த தளத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் பலர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர் என கிளவுட்செக் தனது அறிக்கையில் விளக்கமாக கூறியுள்ளது. எனவே  போலியான கிரிப்டோகரன்சி இணையதளங்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் முதலீட்டாளர்கள் இருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிக்கலாம்: 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்… தடுமாறும் இங்கிலாந்து.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.