மீன் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே நேரம் உடலுக்கு பல தீமைகளையும் வரவழைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏன் மீன் சாப்பிட்டால் மரணம் கூட வரலாம்..!!
கடல் மீனில் அதிக நச்சு தன்மை உள்ளது. நம் பூமியில் இயற்கையான மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். ஆனால் இயற்கைக்கு எதிரான மாற்றங்கள் நடந்தால் அது ஒட்டு மொத்த உலகையே அழித்து விடும். இப்படிப்பட்ட செயல்கள் கடலில் நாம் செய்வதால் அதன் இயல்பு மாறி விஷ தன்மை அடையும்.
கடலில் அதிக பாதரச தன்மை கலந்துள்ளது, எனவே கடல் மீன்களை கர்ப்பம் அடைந்த பெண்கள் உண்டால் அவர்களின் கருவில் உள்ள சிசுவை அதிகம் பாதிக்கும். ஏனென்றால் பாதரசம் மிகவும் விஷத்தன்மை உடையது.
குழந்தைகள் பாதரசம் கலந்த கடல் நீரில் உள்ள மீன்களை சாப்பிடுவதால் சிறு வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடு, கண் சார்ந்த பிரச்சினை, மூளை கோளாறு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
கடல் மீன்களை சாப்பிடுவதால் புது புது வியாதிகள் உங்களை தேடி வரும். ஒவ்வாமை அதிகமாகி விட்டால் உடலிற்கு தீங்கு ஏற்படுத்தி, சுவாச பிரச்சினைகளை தரும். இதனால் சில சமையம் மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகையால் இட பற்றாக்குறை ஏற்பட்டு நிலம், காடு போன்றவற்றை ஆக்கிரமித்து வசிக்கின்றனர். மேலும் அவர்களுக்கென்று பல தொழிற்சாலைகள் வருவதால் அவற்றின் கழிவுகள் வெளியேற்ற இடமின்றி ஆறு, ஏறி, குளம் ஆகியவற்றில் கலந்து கடைசியாக கடலில் சேரும். இதன் விளைவே கடல் முழுவதும் விஷத்தன்மையாக மாறுகிறது.
நச்சு தன்மை கொண்ட கடல் மீன்களை சாப்பிடுவதால் இந்த நோய்கள் வரக்கூடும்.
1. ஆஸ்துமா 2. புற்றுநோய் 3. இதயம் சார்ந்த நோய்கள் 4. மன அழுத்தம் 5. நீரிழிவு 6. பார்வை குறைபாடு 7. மூளை நோய்கள் 8. குடல் கட்டிகள்.