நடிகர் விஜய் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக இருந்து தளபதியாக உயர்ந்திருக்கும் அவரைப்பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்.
1. விஜய் குழந்தை நட்சத்திரமாந நடித்த முதல் படம் “வெற்றி”, பெற்ற சம்பளம் ரூபாய் 500
2. சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை கடிதம் எழுதிவைத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். பின்னர் தேடிக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
3. விஜயின் ஆல் டைம் ஃபேவரிட் இசையமைப்பாளர் இளையராஜா, எப்போதும் தன் காரில் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கும்.
4. விஜயின் ஃபேரிட் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, வீட்டில் ரிலாக்ஸ்க்காக கவுண்டமணி காமெடி டிவிடிக்களை எப்போதும் வைத்திருப்பார்.
5.விஜய்க்கு பிடித்த நிறம் கறுப்பு. காரின் மாடல்களும், எண்களும் மாறினாலும் நிறம் மட்டும் மாறவே மாறாது எப்போதும் கருப்புதான்.
6. தன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருக்கும் இயக்குநர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவினார் விஜய்.
7. விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டையாவது பாடிவிடுவார். ஆனால் மற்ற நடிகருக்கும் அவர் பாடியுள்ளார் ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்காகவும், ‘வேலை’ படத்தில் விக்னேஷ்காகவும் பாடியிருக்கிறார்.
8. அஜித்தும் விஜய்யும் ஆஃப் ஸ்க்ரீனில் நல்ல நண்பர்கள். விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் அவ்வப்போது வெளியே சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
9. அதிகமான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் நடிகர் விஜய். மொத்தம் 22 புதுமுக இயக்குநர்களின் படங்களில் கதாநாயகநாக நடித்துள்ளார்.
10. தான் ஒவ்வொரு படமும் முடிந்த பின்பும் விஜய் வேளாங்கண்ணி சென்று பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.