அவுஸ்திரேலியாவின் விக்டோரியாஇ தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா மாகாணங்களில் உள்ள இலங்கையர்களுக்கு வினைத்திறனான தூதரக சேவைகளை வழங்குவதற்காக, மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் டிஜிட்டல் தூதரக முகாமைத்துவ அமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தூதரகத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த செயலி “App” இனை அறிமுகம் செய்துள்ளதுடன், மேலும் அரசாங்கக் கொள்கைக்கு இணங்க சிறந்த சேவையை வழங்கவும் எதிர்பார்த்துள்ளது.
மெல்போர்னில் உள்ள துணைத் தூதரகம் குறைந்த பணியாளர் குழு மூலம் மாதத்திற்கு சுமார் 150 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புப் பதிவுக்கான 50 விண்ணப்பங்கள், 100 சான்றொப்பங்கள், 100 இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்கள் போன்றவற்றை கையாளுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுகப்படுத்திய இந்த புதிய செயலி மூலம், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே தமது பதிவுகளை மேற்கொள்ள முடிவதுடன், அவர்களின் விண்ணப்பங்களை அவர்களாகவே சரிபார்க்க முடியுமாக உள்ளத்துடன், இதன் மூலம் அலுவலக செயற்பாட்டுக்கான நேரத்தை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அலுவலகச் செயலாக்கம் மற்றும் விண்ணப்பங்களை அனுப்புதல், அறிக்கைகளை உருவாக்குதல் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்களின் நிலை (status) குறித்துத் தெரியப்படுத்தல் ஆகியவை வேகமாகவும் திறமையாகவும் இலகுவாகவும் செயற்படுத்த முடியுமாக உள்ளது. அது மட்டுமல்லாமல், தபால் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அரசாங்க கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி, இலங்கை மென்பொருள் படைப்பாளிகள் Loons Lab Ltd இந்த மென்பொருள் செயலியை உருவாக்கி உள்ளத்துடன், இதனை வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கை தூதரகத்திலும் பயன்படுத்தப்படும் முதல் வகை செயலியாகக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை கொன்சல் ஜெனரல் கபில பொன்சேகாவின் வழிகாட்டுதலின் கீழ், கொன்சல் டயானா பெரேரா இந்த கடினமான டிஜிட்டல் மாற்றத்தை சாத்தியமாக்கி அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன் இந்த முயற்சியை சாதனையாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.