இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பீகார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், நிதி ரீதியாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான மாநிலங்கள் என அறிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இந்தியா தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையை மேம்படுத்திக்கொள் திட்டமிட்டு ஒவ்வொரு மாநிலங்களின் நிதிநிலை குறித்து ரிசர்வ் வங்கி விரிவான ஆய்வை நடத்தியது.
கோவிட் -19 தொற்று நோய் பாதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை மாநிலங்களின் நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது ஆய்வில் முடிவு செய்துள்ளது.
DHFL ரூ.34,615 கோடி வங்கி கடன் மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடி வழக்கு..!
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி செய்த ஆய்வில் ஒவ்வொரு மாநிலத்தின் வருடாந்திர நிதி நெருக்கடி மற்றும் ஜிடிபி மத்தியிலான விகிதங்கள் அடிப்படையில் மாநிலங்களை பிரித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் சராசரி GFD-GDP ratio அளவு 2011-12 முதல் 2019-20 வரையிலான காலக்கட்டத்தில் 2.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்
ஆனால் கொரோனா தொற்றுநோய் தாக்கிய பின்பு, அதாவது 2020 இல் மாநிலங்களின் நிதி நிலைகள் கடுமையாக மோசமடைந்தது, வருவாயில் கூர்மையான சரிவு ஏற்பட்டு, செலவினங்களின் அதிகரித்து, மாநிலங்களின் ஜிடிபி மட்டும் அல்லாமல் இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடும் சரிந்துள்ளது.
டாப் மாநிலங்கள்
ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2021-22 முதல் 2026-27 வரையிலான காலக்கட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஓடிசா அகியவை சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் எனவும், பஞ்சாப் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் எனவும் கணித்துள்ளது.
கடன் சுமை
பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
வருவாய் – செலவுகள்
இந்த 10 மாநிலங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளின் மொத்த செலவினத்தில் பாதிக்கு பங்களிக்கின்றன. இதேபோல் பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் தங்களது மொத்த வருவாயில் 90 சதவீதம் செலவு செய்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் இந்த மாநிலங்களின் வருவாய் குறைந்த நிலையில் செலவுகளும் அதிகரித்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
Bihar, Kerala, Punjab, Rajasthan and WB most stressed fiscally: RBI
Bihar, Kerala, Punjab, Rajasthan and WB most stressed fiscally: RBI