இந்திய தலைமை செயல் அதிகாரிகளுக்கு சராசரி இழப்பீடாக 2022ம் நிதியாண்டில் 11.2 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதே மீடியன் டெர்ம் இழப்பீடாக 7.4 கோடி ரூபாயாக இருந்தது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. இது கடந்த 2021ம் நிதியாண்டில் சராசரியாக தலைமை செயல் அதிகாரியாக இழப்பீடாக 9.4 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2020ம் நிதியாண்டில் 6.9 கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து டெலாய்ட் சர்வேயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தி துறை, நுகர்வோர் பொருட்கள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த பல்வேறு துறையில் ஆய்வு நடத்தப்பட்டது.
சராசரி இழப்பீடு
இது குறித்து புரோமோட்டார் தலைமை செயல் அதிகாரி மற்றும் தொழில் துறை தலைமை செயல் அதிகாரிக்கள் ஆகியோரும் இந்த லிஸ்டில் அடங்கும். இதே தொழில்முறை தலைமை செயல் அதிகாரிகளுக்கு சராசரி இழப்பீடு(compensation) 10 கோடி ரூபாயாக உள்ளது. இதே மீடியன் டெர்மில் 7.4 கோடி ரூபாயாக இருந்தது.
என்னென்ன துறைகள்?
உற்பத்தி துறை, நுகர்வோர் பொருட்கள், ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறை, லைஃப் சயின்ஸ், நிதி சம்பந்தமான சேவைகள் உள்ளிட்ட துறை சேர்ந்த 470 நிறுவனங்கள் அடங்கும்.
திறமைகளுக்கு இடையிலான இடைவெளி, திறமைக்களுக்கு பற்றாக்குறை, என பல காரணிகளுக்கு மத்தியில் சம்பள விகிதமானது அதிகமாக உள்ளது என டெலாய்ட் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
சராசரி எவ்வளவு?
இந்த ஆய்வில் சராசரி இழப்பீடு தலைமை செயல் அதிகாரிக்கு 2.7 மடங்கும், வணிக பிரிவுத் தலைவர்களை விட 3.7 மடங்கும், தலைமை மனிதவள அதிகாரிகள் மற்றும் விற்பனை தலைவர்களின் சராசரி இழப்பீடு 4.1 மடங்கும் உள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் நீண்டகால ஊக்கதொகை உள்பட பலவும் அடங்கும்.
எதை சார்ந்து இழப்பீடு?
தலைமை செயல் அதிகாரிகளின் குறுகிய கால ஊக்கத் தொகைகளில் கிட்டதட்ட 84% நிறுவனத்தின் செயல் திறனை சார்ந்தது. அதே சமயம் CXOsகளுக்கு50% ஆக இருந்தது என ஆய்வறிக்கை கூறுகின்றது. சுமார் 80% நிறுவனங்கள் குறுகிய கால ஊக்கத்தொகைகளுக்கு இலக்கு அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுகின்றன.
நீண்டகால விருப்பத்தேர்வு?
அதே போல நீண்டகால ஊக்கத் தொகைகளுக்கு பங்கு விருப்பத்தேர்வுகள் பொதுவான தேர்வாக இருக்கின்றன. சுமார் 54% நிறுவனங்கள் இதேயே தொடர்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக செயல்திறன் பங்குகளை ஏற்றுக் கொள்வது அதிகரித்து வருகின்றது. தற்போது சுமார் 16% பேர் இதனையே பயன்படுத்துகின்றனர்.
Average salary of Indian CEOs hits 3 year high of Rs.11.2 crore in Fy22: check details
The average compensation for Indian CEOs is Rs 11.2 crore in FY2022. The same median term compensation was Rs 7.4 crore.