17 வங்கிகளில் 34 ஆயிரத்து 615 கோடி ரூபாய் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக டிஎச்எப்எல் நிறுவனர்கள் கபில் வாத்வான், தீரஜ் வாத்வான் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.
எஸ் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் இருவரையும் 2020ஆம் ஆண்டு அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் 17 வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக டிஎச்எப்எல் நிறுவனம், அதன் இயக்குநர்கள் கபில், தீரஜ் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.
இது தொடர்பாக இன்று மும்பையில் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சிபிஐ வரலாற்றிலேயே இது மிகப்பெரும் தொகை கடன் மோசடி வழக்காகக் கருதப்படுகிறது.