வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி


வடக்கில் வாழும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உண்டு என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 52 வீத தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசிய போதே வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ உரிமை இல்லை என தாம் குறிப்பிடவில்லை என வீரசேகரவின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி

முதலில் எதிர்ப்பவர் நான் தான்

இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அதனை முதலில் எதிர்ப்பவர் தாம் என்றும் வீரசேகர குறிப்பிட்டார்.

முழு நாட்டு மக்களால் நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுவதை மக்களின் கருத்தைக் கேட்காமல் வழங்க முடியாது எனவும், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தம் இருக்கும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை தொடர்பான விதிகளுக்கு உடன்பட முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.