வாங்கிய கடனை செலுத்தவில்லை: பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடும் ஐடிபிஐ வங்கி!

ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை என்பதற்காக கிரேட் இந்தியன் நௌடாங்கி நிறுவனத்தின் கார்ப்பரேட் உத்தரவாததாரரான கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடிபிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அடுத்த மாதம் மின்னணு மூலம் ஏலம் நடைபெறும் என்றும் இந்த ஏலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட் இந்தியன் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐடிபிஐ வங்கி, ஏற்கனவே இந்நிறுவனத்தின் சொத்துக்களை கடன் வகைகளுக்காக கையகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனியர் சிட்டிசன்களுக்கு அள்ளி கொடுக்கும் ஐடிபிஐ வங்கி: இன்று முதல் புதிய வட்டி விகிதம்!

கிரேட் இந்தியன் தமாஷா

கிரேட் இந்தியன் தமாஷா

கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனம் ஐடிபிஐ வங்கிக்கு ரூ.86.48 கோடியும், எச்டிஎப்சி வங்கிக்கு ரூ.6.26 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.49.23 கோடியும் கடனாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் மற்றும் வட்டி

கடன் மற்றும் வட்டி

கடந்த மே 1ஆம் தேதி கிரேட் இந்தியன் தமாஷா நிறுவனத்தின் கடன் நிலுவைத்தொகை ரூ.96.63 கோடி மற்றும் அதன் வட்டி ஆகியவை மே இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம்
 

ஏலம்

ஏலம் விடப்படும் சொத்துக்களை ஏலம் வாங்க விரும்புவர்கள் 1.15 கோடி ரூபாய் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும் என்றும், மே 20ஆம் தேதி அன்று சொத்தை கையகப்படுத்தி உள்ள நிலையில் இந்த சொத்துக்களை ஜூலை 27ஆம் தேதி ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

107.24 ஏக்கர் நிலம்

107.24 ஏக்கர் நிலம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள பேரூர் என்ற கிராமத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 107.24 ஏக்கர் உள்ளது என்றும் இந்த சொத்துக்கள் தான் ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி

கடைசி தேதி

இந்த சொத்துக்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ஜூலை 22ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Non payment loan: IDBI Bank put properties of Great India Tamasha

Non payment loan: IDBI Bank put properties of Great India Tamasha

Story first published: Tuesday, June 21, 2022, 8:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.