ரஷ்ய ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் முக்கிய அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியான 53 வயது வாதிம் ஜிமின் என்பவரே, அவரது குடியிருப்பில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார்.
உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் சுங்கத்துறையில் பணியாற்றி வந்துள்ளார் வாதிம் ஜிமின்.
இந்த நிலையில் தமது புதிய பணியில் அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டும் வந்துள்ளார்.
ரஷ்ய உளவுத்துறையில் பணியாற்றிய காலகட்டத்தில், ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் ஆட்சி காலத்தில் தொடர்புடைய பணிக்கு அமர்த்தப்பட்ட வாதிம் ஜிமின், பின்னர் விளாடிமிர் புடின் ஆட்சியிலும் குறித்த பணியை தொடர்ந்துள்ளார்.
உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் சுங்க அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையிலேயே துப்பாக்கி குண்டு காயங்களுடன் தமது குடியிருப்பின் சமையலறையில் சடலமாக மீட்கபட்டுள்ளார் வாதிம் ஜிமின்.
தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது சகோதரரே சடலத்தை முதன்முதலில் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
சுங்கத்துறையில் மூத்த அதிகாரியாக சேர்ந்த பிறகு லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிமின் குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Cheget என ரஷ்ய மொழியில் அறியப்படும் அந்த அணு ஆயுத பெட்டகமானது 1980 தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2019ல் தாம் முதன் முறையாக உலகிற்கு அதன் வடிவம் தொடர்பில் வெளியிடப்பட்டது.
மட்டுமின்றி, அந்த பெட்டகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பிலும் முதன்முதலாக செய்தி ஊடகத்தில் காட்டப்பட்டது.
மேலும், விளாடிமிர் புடின் எங்கே பயணம் மேற்கொண்டாலும், குறித்த பெட்டியை அதிகாரி ஒருவர் எடுத்துச் செல்வார்.
பெட்டியானது ரஷ்ய ஜனாதிபதி உட்பட மூன்று முக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முக்கிய தருணத்தில் மூவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவே இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.