ஹாங்காங்கில் மின் கேபிள் பாலத்தில் திடீர் தீ விபத்து.. சுமார் 20 ஆயிரம் வீடுகளுக்கு மின் விநியோகம் துண்டிப்பு

ஹாங்காங்கில் மின் கேபிள் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, சுமார் 20 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

யுவன் லாங் பகுதியில் உள்ள பாலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 3 மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் உயர் மின்னழுத்த கேபிள்கள் சேதமடைந்தன.

உடனடியாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மருத்துவமனைகள் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மின் விநியோகம் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க 2 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.