10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, 60 குடியிருப்புகளுடன் கூடிய இரட்டை அடுக்குமாடி (duplex) திட்டம் ஆரம்பம்

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர், டெவலப்பர் மற்றும் செயற்பாட்டாளரான டிரில்லியம் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் , 60 குடியிருப்புகளை கொண்ட உயர்தர டூப்ளக்ஸ் (இரண்டு மாடிகள்) அடுக்குமாடி குடியிருப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா 33, லயனல் எதிரிசிங்க மாவத்தை, கொழும்பு-5 இல் (21) நடைபெற்றது.

குறித்த நிறுவன வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், அரச அதிகாரிகள் உட்பட முக்கிய விருந்தினர்கள் மற்றும் டிரில்லியம் சொத்து முகாமைத்துவத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடமானது, இரண்டு ஆண்டுகளுக்குள் வேலைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் தேவையான அனைத்து வசதிகள் காணப்படும் எனவும் , நகரத்தில் உள்ள உயர்தர சொகுசு திட்டமாக இருக்கும் எனவும், ரம்மியமான சுற்று சூழழுடன் காணப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.