777 சார்லி படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி.. நடிகரின் நெகிழ்ச்சிப் பதிவு

செல்லப்பிராணியான நாய்க்கும் அதனை வளர்க்கும் உரிமையாளருக்கும் இடையேயான பாசப்பிணைப்பை அத்தனை உணர்வுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கும் படமாக வெளியாகியிருக்கிறது ‘777 சார்லி’. கன்னட திரைப்படமான அதில் முன்னணி நடிகர் ரஷித் ஷெட்டி நாயகனாக நடித்திருக்கிறார். கிரண் ராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சங்கீதா சிருங்கேரி, ராஜ் பி ஷெட்டி, டேனிஷ் சைட், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த ஜூன் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான 777 சார்லி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், 777 சார்லி படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அந்தப் படத்தின் நாயகன் ராக்‌ஷிட் ஷெட்டி தன்னுடைய ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றினை ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “ரஜினிகாந்த் சாரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. 777 சார்லி படத்தை அவர் நேற்று இரவு பார்த்து பிரமித்து உள்ளார். படம் தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், படத்தின் ஆழமான வடிவமைப்புகள் குறித்தும், குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் குறித்தும் வியந்து பேசினார். அதாவது ஆன்மிக ரீதியான அந்த க்ளைமேக்ஸை அவர் நெகிழ்ந்து பேசினார். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இப்படியான வார்த்தைகளை கேட்பது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி ரஜினிகாந்த் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

What an amazing start to the day!☺

Received a call from Rajinikanth sir. He watched #777Charlie last night and has been in awe of the film. He spoke highly of the making quality, the deeper designs of the film, and especially expressed his admiration for the climax and….
— Rakshit Shetty (@rakshitshetty) June 22, 2022

முன்னதாக, கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் 777 சார்லி படத்தை சமீபத்தில் திரையரங்குக்கு சென்று பார்த்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு அழுதபடியே அவர் வந்திருக்கிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை, “அனைவரும் பார்க்கவேண்டிய படம். படத்தில் நடித்திருக்கும் நாய் கண்ணாலேயே தனது உணர்வுகளை கடத்தியிருக்கிறது. ஏற்கெனவே நாய்களை பற்றிய படங்கள் அதிகமாக வந்திருந்தாலும் இந்த படம் அதன் உணர்ச்சிகளை காட்டுகிறது. நாய்களின் அன்பு நிபந்தனையற்றது. தூய்மையானது.” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.