அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய முக்கிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள இருபத்திமூன்று தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஓபிஎஸ் தகவல் தெரிவித்தார்.
இந்த இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர, வேறு எந்த ஒரு தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.
இதேபோல், எடப்பாடி கே பழனிசாமி தரப்பில், ‘பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி இருப்பதாகவும், பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும் என்றும், பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அல்ல என்றும், திருத்தம் என்பது 2665 பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என்றும், நாளை திருத்தங்கள் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம், பொதுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் விருப்பம் அது என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பத்தின்படி தீர்மானம் விதிக்கப்படும். இதுவே ஜனநாயகம் எனவும் எடப்பாடி கே பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடைகோரிய அணைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நாளை பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.