அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பரபரப்பு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குறையாமல் உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தத்தை மீண்டும் கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க கூடாது என ஓபிஎஸ் காவல்துறையிடம் மனு அளித்தார். ஆனால் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓபிஎஸ் தரப்பு தயாரானது. ஆனாலும் ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவோம் என்று பிடிவாதமாக இருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் சற்று நேரத்தில், அதாவது 11 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தியானம் செய்தது அனைவரும் அறிந்ததே.
அதே போல் தற்போது ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in