iQOO 10 Launch date: புதிய ஐக்யூ 10 பிளாக்ஷிப் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிறுவனம் ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சில மாதங்களுக்கு முன் தான் அறிமுகம் செய்தது. அதில், ஐக்யூ 9, ஐக்யூ 9 எஸ்இ, ஐக்யூ 9 ப்ரோ ஆகிய மூன்று வகை போன்கள் இருந்தது.
தற்போது, ஆறு மாதங்கள் கழித்து நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்து தகவல் கசிந்துள்ளது. எப்போதும் குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்டுவரும் ஐக்யூ பிராண்ட், தனது புதிய போனிலும் பிளாக்ஷிப் அம்சங்களை புகுத்தியுள்ளது.
Xiaomi: உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் போன்; அறிமுகம் செய்யும் சியோமி!
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியானால், சியோமியின் 12 அல்ட்ரா போனுடன், இது நேரடியாக சந்தையில் போட்டியிடும் என்று தெரியவந்துள்ளது.
ஐக்யூ 10 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (iQOO 10 Expected Specifications)
வெளியாக காத்திருக்கும் ஐக்யூ 10 போனில், 6.78 இன்ச் முழு எச்டி+ OLED டிஸ்ப்ளே கொடுக்கப்படும். இது 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் கொண்டு இந்த போன் இயக்கப்படும்.
Nothing Phone (1): ஏலத்தில் விற்றுதீர்ந்த நத்திங் போன் 1 – அதிகபட்ச ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?
ஸ்மார்ட்போனை திறனூட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 புதிய தலைமுறை சிப்செட் பயன்படுத்தப்படும். 12ஜிபி ரேம் வரையும், 512ஜிபி சேமிப்பக ஆதரவையும் இந்த ஸ்மார்ட்போன் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 10 கேமரா (iQOO 10 Camera)
ஐக்யூ 10 போனில், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வரும் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு நிறுவப்படலாம். செல்பி கேமராவாக 32 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!
ஐக்யூ போனில் திறன்வாய்ந்த பேட்டரி வழங்கப்படும். இது 4,600mAh முதல் 4,850mAh வரையிலான திறனுடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை ஊக்குவிக்க 120W வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும்.
இந்த போனின் விலை விவரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. எனினும், ஐக்யூ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், இதன் விலை ரூ.55,000க்கும் குறைவாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.