Nothing Phone (1): ஏலத்தில் விற்றுதீர்ந்த நத்திங் போன் 1 – அதிகபட்ச ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

Nothing Phone 1 Sale: வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்திருக்கும் நத்திங் போன் 1, விற்பனைக்கு முன்னே ஏலத்தில் கொண்டுவரப்பட்டது. இதில் வெறும் 100 போன்கள் மட்டுமே ஏலத்திற்கு விடப்பட்டது.

ஸ்டாக் எக்ஸ் (StockX) எனும் நிறுவனத்துடன் இணைந்து இது நடத்தப்பட்டது. பரபரப்பாக நத்திங் போன் 1 குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கையில், நிறுவனம் ஸ்டாக் எக்ஸ் (StockX) எனும் நிறுவனத்துடன் இணைந்து, அதன் டிராப் எக்ஸ் (DropX) ஏல சந்தையில், போனின் முதல் 100 பதிப்பை விற்பனை செய்யவுள்ளது.

இதில், முதல் 100 இடத்திற்குள் வரும் பயனர்களுக்கு குறியீடு எண் பொறிக்கப்பட்ட போன் வழங்கப்படும். ஒவ்வொரு போன்களிலும், 1 முதல் 100 எண்களில், அது தயாரிக்கப்பட்ட வரிசையின் அடிப்படையில் எண்கள் பொறிக்கப்படும்.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

இந்த நிலையில், ஜூலை 12 ஆம் தேதி உலகளவில் போனின் வெளியீடு இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தியாவில் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தின் வாயிலாக போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

சோல்ட் அவுட் ஆன போன்கள்

ஏலத்திற்கு 100 ஃபோன்கள் மட்டுமே விடப்பட்டது. ஒவ்வொரு போனும் அதை வெல்லும் தொடர்புடைய ஏலத்திற்காக வரிசைப்படுத்தப்படும். போனுக்கான ஏலம் ஜூன் 21, 2022 செவ்வாய்க் கிழமை காலை 9:00 ET தொடங்கி இன்று முடிவதாக இருந்தது.

ஆனால், ஏலம் தொடங்கி சில மணிநேரங்களிலேயே போன் அனைத்தும் ஏலம் கோரபட்டு தொகை முடிவு செய்யப்பட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உச்ச ஏலத்தொகை எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக கோரப்பட்டது தான்.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

நத்திங் போன் (1) அம்சங்கள் – Nothing Phone (1) Specs

நத்திங் போன் அம்சங்கள் (Nothing Phone 1 Specs)குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 5ஜி புராசஸர்பின்பக்கம் ஒளிரும் விளக்குகள்90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளேகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்OIS கேமராவுடன் முதன்மை சென்சார்4,500mAh பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன்விலை ரூ.35,000 முதல் 45,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS நிறுவப்பட்டிருக்கும்
5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!

கோரப்பட்ட உச்ச தொகை

இந்த போனிற்கு $2,679 டாலர்கள் உச்ச ஏலத் தொகையாகக் கோரப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்தும் 9ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிவரிக்கு 35 நாள்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மெக்ஸிகோ மற்றும் தென் கொரியாவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.