அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று மனு அளித்தார்.
மேலும் சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் காவல்துறை கேள்வி நேற்று கேள்வி எழுப்பினர். மேலும், பொதுக்குழுவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல்துறையினர் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில் கடைசி நிமிடங்கள் வரை அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் நொடிக்கு நொடி மாற்றலாம் என்ற நிலை தற்போது நீடிக்கிறது.
“மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . இந்த தருணத்தில், “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ” என்று ஓ.பி.எஸ் ட்வீட் செய்துள்ளார்
அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு போலீசுடன் ஆயுதப்படை போலீஸ் 30 பேர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.