BSNL 19 rs plan details: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. எனவே, சிம் கார்டை செயலில் வைத்திருக்க பயனர்கள் ஒவ்வொரு மாதமும் அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக, இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம் செலவாகும். ஆனால், இனி மாதம் 19 ரூபாய் மட்டுமே இருந்தால் போதும். உங்கள் மொபைல் எண்ணை செயலில் வைத்திருக்க முடியும். இதற்கு நீங்கள் பி எஸ் என் எல் பயனராக இருக்க வேண்டும்.
Facebook: பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்க மார்க் சொன்ன 5 வழிகள்!
பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த சிறப்பைப் பெற முடியும். வெறும் 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாள்கள் வேலிடிட்டியுடன் உங்கள் சிம் கார்டு ஆக்டிவாக செயலில் இருக்கும்.
வேறெதிலும் கிடைக்காத நன்மைகள்
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சிம் ஆக்டிவேஷனுக்கான திட்டங்கள் ரூ.50 முதல் ரூ.120 வரை இருக்கும். இருப்பினும், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் 4ஜி நெட்வொர்க் இணைப்புடன் வருகின்றன.
Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!
பிஎஸ்என்எல் 3ஜி இணைப்பை தான் வழங்குகிறது. BSNL இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 4G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நீங்கள் எண்ணை வைத்துக்கொள்ள விரும்பினால், ரூ.19 ரீசார்ஜ் திட்டம் பலனளிக்கும்.
ஆக்டிவாக வைத்திருக்கும் திட்டம்
இந்த BSNL திட்டத்தில் நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 1 மாதம் அதாவது 30 நாள்கள் ஆகும். நிறுவனம் இந்த திட்டத்திற்கு VoiceRateCutter_19 என்று பெயரிட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் மூலம், ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 20 பைசாவாக இருக்கும்.
5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!
பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, உங்கள் சிம் கார்டில் டேட்டா திட்டம் அல்லது இருப்பு இல்லையென்றாலும், BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உள்வரும் அழைப்புகளை தொடர்ந்து பெறலாம்.
இந்தத் திட்டத்தின் ஆண்டுச் செலவு ரூ.228 மட்டுமே. அதாவது, வெறும் 228 ரூபாய்க்கு, கூடுதல் ரீசார்ஜ் எதுவும் இல்லாமல் உங்கள் மொபைல் எண்ணை ஆண்டு முழுவதும் செயலில் வைத்திருக்கலாம். இந்த திட்டம் BSNL இணையதளத்தில் உள்ள வாய்ஸ் வவுச்சர் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.