Happy Birthday Thalapathy Vijay: இன்று தென்னிந்தியாவிலே’ அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்துள்ளார். ஆனால் இந்த இடம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்து விடவில்லை..
இன்று இளைய தளபதியாக ரசிகர்களின் மனதில் குடிக்கொண்டிருக்கும் விஜய்’ ஆரம்ப காலத்தில் நடித்த ஒரு சில படங்கள் பெரியளவு ஓடவில்லை. ஆனாலும், விஜய் விடவில்லை. தன் விடாமுயற்சியால், தன்னை நடனம், நடிப்பு என அத்தனையிலும் மெருகேற்றி’ இன்று தமிழ் சினிமாவின் ஒரே இளைய தளபதியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய ’யார் இந்த எஸ்.ஏ.சி’ எனும் யூடியூப் சேனலில்’ ஒருமுறை பகிர்ந்த வீடியோவில் விஜய் குறித்து யாருக்குமே தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது விஜய் சினிமா ஆசை குறித்தும், அதற்காக அவர் எவ்வளவு பிடிவாதமாக இருந்தார் என்பது குறித்தும் எஸ்.ஏ.சி. பேசியது; சினிமாவுல எப்படியாவது ஜெயிக்கணும் எனக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. விஜய்க்கும் அதே பிடிவாதம் தான்.
1992ல விஜய் நடிகன் ஆகணும் சொன்னாரு. நான் முடியாது. நீ டாக்டர் ஆனா, நான் உனக்கு ஹாஸ்பிடல் கட்டித்தரேனு சொல்லிட்டேன். அதை கேட்டுட்டு விஜய் ஒரு டாக்டரவோ, இன்ஜினியராவோ, ஒரு லட்சம் சம்பளத்தை வாங்கிட்டு அப்படியே’ காலத்தை ஓட்டிருக்கலாம். ஆனா அப்படி பண்ணல.
விஜய் பிடிவாதமா இருந்தாரு. என்னை தேடாதீங்கனு லட்டரை எழுதி வச்சுட்டு வீட்ட விட்டு போயிட்டாரு. நாள் முழுக்க நானும், ஷோபாவூம் தேடுறோம். ஓரே பிள்ளை. எப்படி இருக்கும்?
நாள் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு, கடைசியில உதயம் தியேட்டர்ல அவர் படம் பாத்துட்டு இருக்காருனு நியூஸ் வந்தது. அதுக்குபிறகு அங்க போய் கூட்டிட்டு வந்தோம்.
என் மகனோட பிடிவாதம் தான் இன்னைக்கு அவர் இருக்கிற இடத்துக்கு காரணம். இந்த வைராக்கியம் தான் இளைஞர்களுக்கு வேணும் என்று எஸ்.ஏ.சி’ தன் மகன் விஜய் குறித்து அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“