Rebel Sena leaders, MLAs in Eknath Shinde camp facing ED, IT heat: Sarnaik, Jadhav, Gawali: கிளர்ச்சி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையை ஏற்றுக்கொள்வதை ஆமோதிக்கும் தீர்மானத்தில் சிவசேனாவின் கிளர்ச்சி எம்எல்ஏக்கள், “எதிர் சித்தாந்தக் கட்சிகளுக்கு” மத்தியில் இருந்து “அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக” சிவசேனா தொண்டர்கள் எதிர்கொள்ளும் “மிகப் பெரிய துன்புறுத்தல் மற்றும் துயரங்கள்” தான், மகாராஷ்டிராவில் கட்சிக்கு ஒரு புதிய அரசியல் பாதையை வகுக்க அவர்கள் விரும்பியதற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்த சிவசேனா எம்எல்ஏக்களில் சிலர், பாஜக ஆளும் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளால் தங்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட விசாரணையின் வடிவத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் “துன்புறுத்தலை” எதிர்கொள்வதாக முன்னர் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஏக்நாத் ஷிண்டே குழுவால் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு நிமிட வீடியோ, கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பரிமாரிக்கொள்வதைக் காட்டியது. கிளர்ச்சிக் குழுவிற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வீடியோவில் மிகவும் குரல் கொடுப்பவராகவும் சுறுசுறுப்பாகவும் தோன்றிய நபரான, ஓவாலா-மஜிவாடாவில் இருந்து மூன்று முறை சிவசேனா எம்.எல்.ஏ.,வாக இருந்த பிரதாப் சர்நாயக், 175 கோடி ரூபாய் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகத்தால் (ED) விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்
குறிப்பிடத்தக்க வகையில், மஹாராஷ்டிரா முதல்வரும் கட்சி மேலாளருமான உத்தவ் தாக்கரேவை, மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைக்குமாறு பகிரங்கமாகக் கேட்ட சிவசேனா தலைவர்களில் பிரதாப் சர்நாயக் முதன்மையானவர்.
ஜூன் 9, 2021 அன்று, பிரதாப் சர்நாயக் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் மாநிலத்தில் சிவசேனா கட்சியின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக, மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளான என்.சி.பி மற்றும் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். அதைவிட குறிப்பாக, சிவசேனா தலைவர்களை “மத்திய அமைப்புகளால்” துன்புறுத்தப்படுவதில் இருந்து “காப்பாற்ற” பா.ஜ.க.,வுடன் ஒத்துப்போகுமாறு வெளிப்படையாக வலியுறுத்தினார்.
அப்போது அவர், சிவசேனா தலைவர்களை மத்திய அமைப்புகள் “தேவையில்லாமல் துன்புறுத்துவதாக” குற்றம் சாட்டியிருந்தார். “எனது தனிப்பட்ட கருத்துப்படி, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியுடன் நாம் இணக்கமாக இருப்பது அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் பிரதாப் சர்நாயக், அனில் பராப் மற்றும் ரவீந்திர வைகர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் நின்றுவிடும் என்று எங்கள் ஆதரவாளர்கள் பலர் கருதுகின்றனர்” என்று பிரதாப் சர்நாயக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அனில் பராப் மற்றும் ரவீந்திர வைகர் இன்னும் உத்தவ் தாக்கரே உடன் இருப்பதாகக் கூறப்படும் அதேவேளையில், பிரதாப் சர்நாயக் அழுத்தத்தின் கீழ் “கட்டுப்பட்டுள்ளதாக” கூறப்படுகிறது. தானே மற்றும் மும்பையைச் சுற்றியுள்ள விருந்தோம்பல் வணிகங்களை நடத்தும் விஹாங் குழும நிறுவனங்களின் மூலம் தானேயின் ரியல் எஸ்டேட் துறையில் அவர் ஒரு பெரிய தொழிலதிபராக உள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம், நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்டில் (என்எஸ்இஎல்) ரூ.5,600 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் பிரதாப் சார்நாயக்கின் ரூ.11.35 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இணைக்கப்பட்ட சொத்துக்களில் தானேயில் உள்ள இரண்டு பிளாட் மற்றும் ஒரு நிலம் அடங்கும்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சிக் குழுவில் இணைந்த மற்றொரு முக்கிய சிவசேனா எம்.எல்.ஏ, பைகுல்லா எம்.எல்.ஏ யாமினி ஜாதவ், பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) நிலைக்குழுவின் முன்னாள் தலைவரான யஷ்வந்த் ஜாதவ் என்பவரின் மனைவி ஆவர். யஷ்வந்த் ஜாதவ் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த ஆண்டு தொடக்கத்தில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பாந்த்ராவில் உள்ள ஜாதவ்களுக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும், யஷ்வந்துடன் தொடர்புடைய 40 சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும் மற்றொரு சிவசேனா தலைவர் சேனா எம்.பி பாவனா கவாலி ஆவார், அவரும் கிளர்ச்சி பிரிவுக்கு ஆதரவாக வந்துள்ளார். திங்களன்று உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பிய அவர், ஏக்நாத் ஷிண்டே குழு எழுப்பிய கவலைகளை அவர் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாவனா கவாலி தற்போது தனது தாயுடன் சேர்ந்து நடத்தும் ஒரு NGO மீது பண மோசடி விசாரணையை எதிர்கொள்கிறார். அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சயீத் கானை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது, மற்றும் சையது கானின் ரூ.3.75 கோடி மதிப்பிலான அலுவலக கட்டிடத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.