அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், ஓடும் ரயிலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முனி ஃபாரஸ்ட் ஹில் ஸ்டேஷனில் இருந்து காஸ்ட்ரோ ரயில் நிலையத்தை நோக்கிச் சென்ற ரயிலில் இந்நிகழ்வு நடந்ததாகவும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் ஒருவர் மற்றொருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சான் பிரான்சிஸ்கோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன