“அராஜக போக்கில் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகவே இருந்து இன்றைய பொதுக்குழு" – வைத்திலிங்கம்

இன்று நடைபெற்ற பொதுக்குழு முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், “அதிமுக அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் தேர்வு செய்ய வேண்டும். இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் என்பது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இருந்தது அதனை நீராகரிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வும் செல்லாமல் சென்று விட்டது. எனவே இந்த பொதுக்குழு என்பது செல்லாது.
image
இதையும் படிங்க… ஆப்கன் நிலநடுக்கம் – ஆயிரம் பேர் பலி! சர்வதேச நாடுகள் உதவியை கோரும் தாலிபான் அரசு!
அதிமுகவில் அவைத்தலைவர் பதவி என்பது பொதுசெயலாளர் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தது. அப்படி பார்த்தால் அவைத்தலைவர் பதவியை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்ய முடியும். அவைதைலைவர் மட்டும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. அராஜக போக்கோடு சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகவே இன்றைய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளோம். இரட்டை தலைமையோடு செயல்பட்டால் மட்டுமே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது, ஒற்றை தலைமை அழிவு பாதைக்கு அழைத்து செல்லும். இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த தற்போதும் தயாராக உள்ளோம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.