கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் போடப்பட்டு வருகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இந்த நிவாரணப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இதில் அடங்கியுள்ளன.
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மொட்டை மாடிகளில் தவித்து வரும் மக்களை கண்டுபிடித்து இந்த நிவாரணப் பொருட்களை விமானப்படை வீரர்கள் போட்டு வருகின்றனர்.