ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட துயரம்… பெருந்தொகை இழப்பீடு பெற்ற பிரித்தானிய பெண்


பிரித்தானியாவில் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் வருங்கால கணவரை பறிக்கொடுத்த பெண் ஒருவர் NHS இடம் இருந்து பெருந்தொகை இழப்பீடாக பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் ஆஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியானது 2020 இறுதியில் பாதுகாப்பானது என சர்வதேச அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு மாற்றாக வேறு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் முடிவு செய்யப்பட்டது.

இளைஞர்களில் இரத்த உறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதே ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை மாற்றாக பயன்படுத்த அறிவுறுத்த காரணமாக அமைந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 48 வயதான Lord Zion என்பவர், ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னர் கடுமையான தலைவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மே மாதத்திலேயே அவர் மரணமடைந்தார்.

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஏற்பட்ட துயரம்... பெருந்தொகை இழப்பீடு பெற்ற பிரித்தானிய பெண்

அவரது வருங்கால மனைவி 38 வயதான Vikki Spit இச்சம்பவத்தால் நொறுங்கிப்போனதாக குறிப்பிட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

மேலும், Lord Zion-ன் இறுதிச்சடங்குகளுக்காக கடன் வாங்கியதாகவும் தெரிவித்தார். மட்டுமின்றி, NHS இலிருந்து இழப்பீடு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளுக்காக அவரது குடும்பத்திடமிருந்து கடன் வாங்க வேண்டியிருந்தது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், NHS இலிருந்து இழப்பீடாக 120,000 பவுண்டுகள் தொகை Vikki Spit என்பவருக்கு கடந்த வாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட இழப்பிற்காக பெருந்தொகை இழப்பீடாக அளிப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
ஆனால், இதுபோன்று இழப்பீடு பெற்றவர்கள் ஆயுள் முழுவதும் மருத்துவ உதவியை நாடும் நிலையில் தான் உள்ளனர் என Vikki Spit குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.