இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு தோள் கொடுக்கலாம்.. எப்படி.. அமெரிக்கா பரபர கருத்து!

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து நடு நிலை வகித்து வருகின்றன. யாருக்கும் தங்கள் ஆதரவினை கொடுக்கவில்லை. ஆனால் வணிக நடவடிக்கைகளை தொடர்ந்து இரு நாடுகளும் ரஷ்யாவுடன் மேம்படுத்தி வருகின்றது.

இதன் மூலம் ரஷ்யாவுக்கு, சீனாவும், இந்தியாவும் மறைமுகமாக ஆதரவளிக்கிறதோ? என்ற சந்தேகமும் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவுக்கு ஆரம்பத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ரஷ்யாவுடன் வணிக நடவடிக்கையினை நிறுத்த வேண்டும் என கூறின. ஆனால் இதற்கு இந்தியா செவி சாய்க்காத நிலையில், ஏற்கனவே செய்து வந்த வணிக போக்கினை தொடரலாம். அதாவது ஏற்கனவே வாங்கிய அளவு எண்ணெய் வாங்கலாம். ஆனால் கூடுதலாக வாங்க கூடாது என கூறின.

திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!

என்ன தான் பிரச்சனை?

என்ன தான் பிரச்சனை?

ஆனால் கடந்த மாதம் சவுதி அரேபியாவினையும் தாண்டி, இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக ரஷ்யா உள்ளது. இந்தியாவினை தொடர்ந்து சீனாவும் தற்போது எண்ணெய் இறக்குமதியினை அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிக மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் மத்தியில், பல்வேறு நாடுகளும் இதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளன.

 

அமெரிக்கா தரப்பு கருத்து

அமெரிக்கா தரப்பு கருத்து

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவர், இந்தியாவும் சீனாவும், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கலாம் என கூறியுள்ளார்.

 

சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது நடப்பு மாத தொடக்கத்தில் பேரலுக்கு 122 டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 105 டாலர்கள் என்ற லெவலுக்கு குறைந்துள்ளது. இது சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள தளர்வுகளால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறக்குமதி அதிகரிக்கலாம்
 

இறக்குமதி அதிகரிக்கலாம்

ரஷ்யாவின் மிகப்பெரிய இறக்குமதியாளர்களில் ஒருவராக சீனா மாறி வருகின்றது. இந்தியா ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியினை ரஷ்யாவிடம் இருந்து அதிகரித்துள்ளது. தற்போது இவ்விரு நாடுகளும் இன்னும் ரஷ்யாவுடன் நெருக்கமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆக விரைவில் மொத்தத்தில் பாதி இறக்குமதி ரஷ்யாவில் இருந்து செய்யலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது.

எப்படி இறக்குமதி?

எப்படி இறக்குமதி?

ரஷ்யாவில் இருந்து பசிபிக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. அதே வேளையில் மேற்கு கரை பக்கம் இருக்கும் துறைமுகத்தில் இருந்து இந்தியாவும் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. மொத்தத்தில் இவ்விரு நாடுகளும் ஆசியாவிலேயே மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளன.

எவ்வளவு ஏற்றுமதி?

எவ்வளவு ஏற்றுமதி?

ஆசிய நாடுகளுக்கு செல்வதற்காக ஜூன் 10 நிலவரப்படி, ரஷ்யாவின் மேற்கு ஏற்றுமதி முனையங்காளில் ஒரு நாளைக்கு சுமார் 8,60,000 பேரல்கள் எண்ணெய் டேங்கர்களில் ஏற்றப்பட்டுள்ளது. இது முந்தைய ஏற்றுமதியை காட்டிலும் அதிகம் என்பதை இதன் மூலமே அறிய முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China and India may increase their purchases of more oil from Russia: US

One of US President Joe Biden’s economic advisers has said that India and China can buy more oil from Russia.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.