TNHRCE Erode Bannari Amman temple recruitment apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட உள்ள முதலுதவி மருத்துவ மையத்தில், மருத்துவ அலுவலர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4 VAO தேர்வு; இப்படி படித்தால்… நீங்களும் அரசு அதிகாரி தான்!
மருத்துவ அலுவலர் (Medical Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Staff Nurse/MLHP DGNM (Diploma in General Nursing and Midwives)
சம்பளம் : ரூ. 14,000
மருத்துவமனைப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 6,000
வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/10245/497/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில், பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம் – 638401.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.07.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/10245/497/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.