அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
பயணிகள் வருகையில் வீழ்ச்சி
கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா காலப்பகுதியில் நாட்டிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு
எனினும் நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வருகையாளர்கள் மற்றும் செல்பவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக குறைந்துள்ளதாக ஷெஹான் சுமன்சேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அந்நிய செலவாணியில் சுற்றுலாத்துறை முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.