இளம்பெண்ணை நெருங்க முயன்ற நபர்; தடுத்ததால் ஆத்திரம் – குமரியை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கின் பின்னணி

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான சகாயராஜுக்கு பவுலின் மேரி என்ற மனைவியும் அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உண்டு. ஆன்றோ சகாயராஜும், அவரின் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை செய்துவருகின்றனர். மற்றொரு மகன் ஆரோன் சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

பவுலின்மேரி அவரின் தாயார் திரேசம்மாளுடன் முட்டம் பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் பவுலின் மேரி, அவரின் தாய் திரேசம்மாள் ஆகியோர் கடந்த 7-ம் தேதி காலை வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. அவர்களது உறவினர் ஒருவர் போனில் அழைத்தபோதும், யாரும் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து கடந்த 7-ம் தேதி மதியம் உறவினர்கள் பவுலின் மேரி வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். கதவு பூட்டியிருந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் ஹாலில் பவுலின் மேரியும், அவரின் தாய் திரேசம்மாளும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர்.

கைதுசெய்யப்பட்ட அமல சுமன்

இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வெள்ளிச்சந்தை போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது அயன் பாக்ஸால் அடித்து அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், பவுலின் மேரி, அவரின் தாய் அகியோர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை. மேலும், மங்கி குல்லா ஒன்றை கைப்பற்றிய போலீஸார் அதை மையமாகக்கொண்டு விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் கஞ்சா கும்பலைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து போலிஸார் விசாரண நடத்தினர். இந்த நிலையில் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அமல சுமன்(36) என்பவரை கைது செய்துள்ளதாக போலிஸார் நேற்று தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம்பற்றி போலீஸிடம் விசாரத்தோம், “பவுலின் மேரியின் செல்போனை ஆய்வு செய்தபோது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. அந்த இளம் பெண்ணிடம் விசாரித்தபோது, பவுலின் மேரியின் வீட்டில் தையல் பயிற்சிக்காக சென்றதாகவும், பயிற்சிக்கு போய்விட்டு வரும்போது தன்னை பின் தொடர்ந்த அமல சுமன் செல்போன் நம்பரை கேட்டதாகவும், இதுபற்றி பவுலின் மேரியிடம் கூறியபோது அவர் அமல சுமனை கண்டித்ததாகவும் தெரிவித்தார்.

போலீஸ் பிடியில் அமல சுமன்

இதை அடுத்து அமல சுமனை பிடித்து விசாரணை நடத்தினோம். அவர் ஏத்கனவே பல பெண்களை வலையில் வீழ்த்தி நெருக்கமாக இருந்துள்ளது தெரியவந்தது. இளம் பெண்ணை நெருங்க விடாமல் தன்னிடம் தகராறு செய்த பவுலின் மேரியை பழிவாங்க முடிவு செய்த அமல சுமன் கடந்த 6-ம் தேதி குடி போதையில் அவரின் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அடித்துள்ளார். ஆனால், பவுலின் மேரி வெளியே வரவில்லை. இதனால் கோபமான அமல சுமன் வீட்டுக்கு வெளியே இருந்த மின் மீட்டரை அடித்து நொறுக்கிவிட்டு சென்றுள்ளர்.

அதன் பிறகு மீண்டும் பவுலின் மேரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மின் இணைப்பு இருந்த நிலையில் மீண்டும் காலிங் பெல்லை அடித்துள்ளார் அமல சுமன். பவுலின்மேரி கதவை திறந்ததும் வீட்டுக்குள் சென்ற அமல சுமன் அவரிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் அங்கிருந்த அயர்ன் பாக்ஸ் ஒயரால் பவுலின் மேரியின் கழுத்தை இறுக்கி பின்னர் அங்கிருந்த சுத்தியலால் அவர் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்ததாக அமல சுமன் தெரிவித்தார். இதை தடுக்க சென்ற திரேசம்மாளின் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார்.

திரேசம்மாள், பவுலின் மேரி

கொலையை திசை திருப்ப பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11-சவரன் தாலி சங்கிலி கம்மல் மற்றும் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 3-சவரன் தங்க சங்கிலியையும் கொலைக்கு பயன்படுத்திய சுத்தியலை எடுத்து கொண்டு வீட்டின் முன்பக்க கதவை சாவியால் பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும் அப்போது, தான் அணிந்திருந்த மங்கி குல்லா தொப்பி தவறி விழுந்து விட்டதாகவும் அமல சுதன் தெதிவித்துள்ளார். பவுலின் மேரியிடம் திருடிய தங்க சங்கிலியை மணவாளக்குறிச்சியில் ஒரு பைனான்சில் அடகு வைத்து தான் தொடர்பில் இருந்த ஒரு பெண்ணுடன் இரண்டு நாள் வெளியூர்களில் சுற்றி வந்துள்ளார்” என்றனர்.

போலீஸ் விசாரணை நடத்திய சமயத்தில் அடிக்கடி பவுலின் மேரியின் வீட்டருகே சென்று ஒன்றும் தெரியாதது நின்றுகொண்டு தினமும் நடக்கும் விசாரணை குறித்த தகவல்களை அறிந்துகொண்டு சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட அமல சுதன் நகைகளை விற்று வாங்கிய பைக், மற்றொரு பைக் என இரண்டு பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.