தென் அமெரிக்க நாடான ஈக்வேடாரில் எரிபொருள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
புயோ நகரில் கட்டிடங்களை அடித்து நொறுக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீசார் 6 பேர் காயமடைந்தனர். போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டு தலையில் விழுந்ததில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார்.