உக்ரைனில் களமிறங்கும் ரோபோ நாய்கள்: ரஷ்ய போரில் அமெரிக்கா செய்துள்ள மிகப் பெரிய உதவி!


உக்ரைனில் ரஷ்ய படைவீரர்களால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கா தங்களது இரண்டு ரோபோ நாய்களில் ஒன்றை உக்ரைனுக்கு வழங்க சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் தற்போது செயல்பட்டு வரும் அமெரிக்காவின் இலாப நோக்கமற்ற அமைப்பான ஹாலோ டிரஸ்ட் (HALO Trust) நிறுவனத்துக்கு உதவுவதற்காக கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத நிலையில் இருக்கும் கிளஸ்டர் வெடிகளை (cluster munitions) அகற்றுவதற்காக அமெரிக்கா தங்களது இரண்டு ரோபோ நாய்களில் ஒன்றை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க சம்மதித்து இருப்பதாக வெளியுறவு கொள்கையின் தகவலில் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றும் ஹாலோ டிரஸ்ட் நிறுவனம் உக்ரைனில் பணிப்புரிய பல அமெரிக்க அரசாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனில் களமிறங்கும் ரோபோ நாய்கள்: ரஷ்ய போரில் அமெரிக்கா செய்துள்ள மிகப் பெரிய உதவி!

அதனடிப்படையில் பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாயை கொண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஹாலோ டிரஸ்ட் நிறுவனம் கண்ணி வெடிகளை மற்றும் கிளஸ்டர் வெடிகளை செயலிக்க செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

ரோபோ நாய்களில் தலைக்கு பதிலாக இடம்பெற்று இருக்கும் இயந்தர கையானது, கிளஸ்டர் குண்டுகள் போன்ற வெடிக்காத வெடிமருந்துகளை மற்ற வெடிமருந்துகளைக் கொண்ட குழிகளுக்குள் நகர்த்துவதற்கு ஸ்பாட் உதவக்கூடும், மேலும் இவை மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளில் பொதுமக்களை பாதுகாக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் களமிறங்கும் ரோபோ நாய்கள்: ரஷ்ய போரில் அமெரிக்கா செய்துள்ள மிகப் பெரிய உதவி!

பொதுவாக, இவை மக்களைத் தீங்கிழைக்கும் வழியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு சிறந்த கருவியாகும்.

கூடுதல் செய்திகளுக்கு: ஆப்கானிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டிய முக்கிய உலக நாடுகள்: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு

 மேலும் அபாயகரமான பொருட்களை பாதுகாப்பான தூரத்தில் இருந்து ஆய்வு செய்ய ரோபோ அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது” என்று நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் நிகோலஸ் நோயல் கூறினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.