உங்கள் வங்கி உங்களுக்கு ஒருபோதும் சொல்லாத ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

வங்கிகள் நமக்கும் சேவை செய்வது போல் இருந்தாலும் வங்கிகள் தங்களுடைய முன்னேற்றத்திற்காகவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கும் போது உங்களுக்கு கொடுக்கும் விண்ணப்பத்தை படிக்காமலேயே கையெழுத்திடும் நபராக இருந்தால் கீழ்க்கண்ட விஷயங்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

வங்கிகளில் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

தேவையில்லாத காப்பீடு

உங்கள் வங்கியிடமிருந்து கிரெடிட் கார்டை பெற்றிருந்தால் உங்கள் வங்கியாளர் பல்வேறுவகையான காப்பீட்டை உங்களுக்கு வழங்கலாம். ஆனால் அது உண்மையில் பயனற்றவை.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

நீங்கள் தனிநபர் கடனை பெற விரும்பினால் வங்கியின் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்களிடம் நல்ல கிரெடிட் ரிப்போர்ட் இல்லை என்றால் நீங்கள் சரியான வட்டி விகிதத்தை பெற முடியாமல் போகலாம்.

தேவையில்லாத திட்டங்கள்

தேவையில்லாத திட்டங்கள்

வங்கி ஊழியர்களுக்கு என சில இலக்குகள் இருக்கின்றன. அதனால் வங்கி ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக முடிவு எடுப்பார்கள் என்று நீங்கள் நம்ப வேண்டாம். தங்களுடைய இலக்குகளை அடைவதற்காக பணியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத திட்டங்களில் ஈடுபடுத்த கட்டாயப் படுத்தலாம்.

டெபிட் கார்டு
 

டெபிட் கார்டு

நீங்கள் உங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தும் போது சில கட்டணங்கள் செலுத்த வேண்டும். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் வாங்கும் வணிகமும் டெபிட் கார்டை பயன்படுத்தும் போது கட்டணம் செலுத்தும். எனவே டெபிட் கார்டை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும்.

ஊழியர்களின் மன அழுத்தம்

ஊழியர்களின் மன அழுத்தம்

வங்கி ஊழியர்கள் ஒரு சிலர் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்பு உண்டு. தங்களுடைய இலக்கை அடைவதற்காக மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்களும், தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மனச்சோர்வு பிரச்சனைகளில் பல வங்கி ஊழியர்கள் உள்ளனர். சிலசமயம் அவர்களுடைய சோர்வு நமக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

முதலீடு

முதலீடு

உங்கள் பணத்தை முதலீடு செய்ய வங்கி எப்போதும் சிறந்த இடமாக இருக்காது. வங்கிகளை பணப்பரிவர்த்தனைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வங்கியில் மிகக்குறைந்த வட்டியே இருக்கும் என்பதால் பங்குச் சந்தை உள்ளிட்ட இடங்களில் முதலீடு செய்யலாம்.

வங்கி வளர்ச்சி

வங்கி வளர்ச்சி

வங்கியில் பணிபுரிபவர்கள் எப்போதும் தங்கள் வங்கியின் வளர்ச்சிக்காக மட்டுமே பணிபுரிவார்கள். அவர்களுடைய நோக்கம் எப்போதும் வங்கியின் வளர்ச்சியில் மட்டுமே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக பலன்களை பெறுவதையே பெரும்பாலான வங்கிகள் குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.

அடமானம்

அடமானம்

நீங்கள் வங்கியில் அடமானம் வைத்த வீட்டை விற்பனை செய்ய நேர்ந்தால் வங்கிகள் உங்களுக்கு அபராதம் விதிக்கும். இந்த நடைமுறையை பலர் அறிந்திருப்பதில்லை.

நேர்மை

நேர்மை

வங்கிகள் எப்போதும் நேர்மையாக இருக்கும் என்று நினைக்க முடியாது. வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடுவது, போலி டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்குவதன் மூலம் சில குற்றங்கள் செய்வது குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறைந்த ஊதியம் பெறும் சில வங்கி ஊழியர்கள் இந்த சட்ட விரோத செயல்களை செய்வதால் வாடிக்கையாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சர்வதேச சுற்றுப்பயணம்

சர்வதேச சுற்றுப்பயணம்

சர்வதேச சுற்றுப் பயணம் செய்யும் போது உங்களிடம் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். சுற்றுலாவுக்கு இலவசம் என்று விளம்பரப்படுத்தி இருந்தாலும், மிகப்பெரிய அளவில் பரிமாற்ற கட்டணங்கள் விதிக்கப்படலாம்.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

முக்கியமாக நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கும் போது அதன் விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை முழுமையாக படித்து விடுங்கள். ஒரு சில நிபந்தனைகள் உங்கள் சொத்துக்களை முடக்கும் அபாயமும் இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are the secrets your bank will never tell you

What are the secrets your bank will never tell you

Story first published: Thursday, June 23, 2022, 8:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.