உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டில் சாலையோர மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 17 பேரில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 7 பேரில் 5 பேர் மாவட்ட மருத்துவமனையிலும், 2 பேர் பரேலியில் உள்ள மருத்துவனைமயிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.