சாம்சங் நிறுவனம் தனது தயாரிப்பு பொருள் ஒன்றின் தவறான தகவல் தந்ததற்கு அந்நிறுவனத்திற்கு 9.55 மில்லியன் டாலர் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சாம்சங் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் அதன் தயாரிப்புகளில் ஒன்றான கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்தது.
அந்த விளம்பரத்தில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் நீர் எதிர்ப்பு நிலை கொண்டது என்றும் வாட்டர் ப்ரூப் கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பானது என்றும் விளம்பரப்படுத்தியது.
356 பில்லியன் புதிய முதலீடு, 80,000 புதிய வேலைவாய்ப்புகள்: சாம்சங் நிறுவனத்தின் மெகா திட்டம்!
வாட்டர் ப்ரூப்
ஆனால் அந்த மொபைல் போனை வாங்கியவர்கள் வாட்டர் ப்ரூப் வேலை செய்யவில்லை என்றும் நீர் உள்ளே சென்றதும் மொபைல் போன் பழுதானது என்றும் புகார் அளித்துள்ளனர்.
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள நுகர்வோர் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் வாட்டர் ப்ரூப் சரியாக வேலை செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு
இதனை அடுத்து சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சாம்சங் நிறுவனம் தனது தவறை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து சாம்சங் நிறுவனத்திற்கு 9.65 மில்லியன் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம்
மேலும் வாட்டர் ப்ரூப் குறித்த புகார்களை சரிசெய்ய மாறும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தற்போது சாம்சங் நிறுவனம் வாட்டர் ப்ரூப் சரியாக வேலை செய்யும் வகையில் தனது கேலக்ஸி போன்களில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விளம்பரம்
தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும் மொபைல் போன் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஒரே ஒரு தவறான தகவலை விளம்பரம் மூலம் கொடுத்ததற்காக அந்நிறுவனத்திற்கு 9.65 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samsung Australia fined $9.7 million over false water-resistance claims
Samsung Australia fined $9.7 million over false water-resistance claims | ஒரே ஒரு தவறான தகவல்: சாம்சங் நிறுவனத்திற்கு $9.7 மில்லியன் அபராதம்