ஒரே நாளில் எகிறிய கொரோனா… எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீ்ங்க!

இந்திய அளவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 13,313 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவி்ததுள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் 4,224 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா -3,260, டெல்லி -928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, கொரோனா பரிசோதனை தினந்தோறும் சராசரியாக 4 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வந்தது. தற்போது தொற்று பாதிப்பு பரவலாக அதிகரித்து வருவதால் பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதன்படி நேற்று மட்டும் நாடு முழுவதும் 6.56 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 85.94 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று (ஜூன் 22) கொரோனா பாதிப்பு 12,249 ஆக இருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 13,313 ஆக எகிறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.