கவுன்சலிங் போறீங்களா? தமிழக டாப் 10 பொறியியல் கல்லூரிகள் இவை!

Top 10 Engineering colleges list under Anna University in Tamilnadu: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம் செய்வது எப்படி? கவுன்சிலிங் செயல்முறை என்ன? தமிழகத்தில் உள்ள டாப் பொறியியல் கல்லூரிகள் எவை? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை, அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்: TNEA 2022: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; A-Z தகவல்கள்

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், நீங்கள் கல்லூரிகளை தேர்வு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதாவது உங்களுக்கான தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், நீங்கள் ஆன்லைனில், நீங்கள் விரும்பும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதன்பிற்கு உங்களுடைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு ஏற்ப உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் இருந்து ஓதுக்கீடு செய்யப்படும்.

தற்போது தமிழகத்தின் டாப் பொறியியல் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம். கேரியர் கைடன்ஸ் யூடியூப் சேனலின் அஸ்வின் தமிழகத்தில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கல்லூரிகளுக்கு மாணவர்கள் அளிக்கும் முன்னுரிமை, ஆவரேஜ் கட் ஆஃப், இடங்கள் நிரப்பப்படும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் டாப் கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார்.

டாப் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில், குரோம்பேட்டையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸ் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் என அழைக்கப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி உள்ளது.

அடுத்த இடத்தில் காரைக்குடியில் உள்ள சிக்ரி எனப்படும் செண்ட்ரல் எலக்ட்ரோ – கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டியூட் உள்ளது. கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பவர்களின் முதல் தேர்வாக இந்த கல்லூரி உள்ளது.

அடுத்த இரண்டு இடங்களில் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகள் உள்ளன. கோவை பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சி.ஐ.டி எனப்படும் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

அதற்கு அடுத்தப்படியாக, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பி.எஸ்.ஜி இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளது. அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கேம்பஸ் உள்ளது. இவை தமிழகத்தில் முதல் 10 இடங்களில் உள்ள கல்லூரிகளாக உள்ளன.

இதற்கு அடுத்தப்படியாக அதிக விருப்பமுள்ள சில கல்லூரிகளையும் இப்போது பார்ப்போம்.

சென்னை இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி தனியார் கல்லூரிகளில் எஸ்.எஸ்.என் கல்லூரிக்கு அடுத்தப்படியாக முக்கியமான கல்லூரியாக உள்ளது.

சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர் குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், சென்னை ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜ் ஆகிய அடுத்த இடங்களில் முக்கிய கல்லூரிகளாக இருக்கின்றன. இவ்வாறு அஸ்வின் கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.