கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் இழந்தது இத்தனை ஆயிரம் கோடியா?

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஏராளமான பணத்தை பலர் இழந்துள்ள நிலையில் தற்போது போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக ஆயிரம் கோடி ரூபாயை இந்தியர்கள் இழந்துள்ளதாக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக இருந்தது என்பது தெரிந்ததே.

குறிபாக கிரிப்டோகரன்சியில் இளைய தலைமுறையினர் அதிகமாக முதலீடு செய்தனர் என்பதும் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் இதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோகரன்சியில் முதலீடு

இந்த நிலையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து அதன் மதிப்பு சரிவு காரணமாக நஷ்டமடைந்தவர்கள் மட்டுமின்றி போலியான இணையதளங்கள் மூலமும், போலியான ஆண்ட்ராய்டு ஆப் மூலமும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து இந்தியர்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர் என சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிளவுட்செக்  சைபர் பாதுகாப்பு

கிளவுட்செக் சைபர் பாதுகாப்பு

கிளவுட்செக் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி இது குறித்து கூறிய போது ‘இந்தியர்கள் போலியான கிரிப்டோகரன்சியில் பரிமாற்றம் செய்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர் என்றும் எங்களிடம் வந்து 50 லட்சத்தை இழந்த ஒருவர் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெபாசிட் கட்டணம், வரி உள்பட கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த வகையில் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாகவும் அவர் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மோசடி
 

மோசடி

கிரிப்டோகரன்சி வாங்கும் நபர்களை அடையாளம் காணும் போலியான இணையதளங்கள் வைத்திருப்பவர்கள், அவர்களை இலக்காக வைத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கிளவுட்செக் தனது அறிக்கையில் விளக்கமாக கூறியுள்ளது.

போலி இணையதளங்கள்

போலி இணையதளங்கள்

இதன்படி கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என போலியான இணையதளங்களை மர்மநபர்கள் உருவாக்கி இதுதான் சட்டபூர்வமாக கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என விளம்பரம் செய்கின்றனர். இந்த தளத்தில் கிரிப்டோகரன்சியை வாங்கவும் விற்கவும் செய்யலாம் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் பலர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்த இணையதளம் பார்ப்பதற்கு உண்மையான கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் போல் இருந்தாலும் இவை போலி இணையதளங்கள் என்றும் இவ்வகையான இணையதளங்களை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்கள் அடையாளம் கண்டுகொண்டு விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமையான பேச்சு

இனிமையான பேச்சு

இந்த இணையதளத்தில் முதலீடு செய்பவர்களிடம் முதலில் ஒரு பெண் பேசுவார் என்றும் அவரே கிரிப்டோகரன்சி முதலீடு செய்வதற்கான கணக்கை உருவாக்கி முதலீட்டாளர்களிடம் நட்பு வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் இனிமையான பேச்சில் மயங்கும் முதலீட்டாளர்கள் அவர் கூறும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தாங்கள் முதலீடு செய்வது போலியான இணையதளம் என்பது தெரிந்திருப்பதில்லை.

ஆசையை தூண்டுதல்

ஆசையை தூண்டுதல்

முதலில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களிடம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று அந்த பெண் ஆசையை தூண்டுவார் என்றும் அந்தப் பெண்ணின் இனிமையான பேச்சு மற்றும் பேராசை காரணமாக பலர் போலி கிரிப்டோகரன்சி இணையதளத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

சிக்கும் முதலீட்டாளர்கள்

சிக்கும் முதலீட்டாளர்கள்

முதலீடு செய்பவர்களுக்கு முதல்கட்டமாக நல்ல லாபத்தை தந்து அவர்களை அதிக அளவில் முதலீடு செய்ய வைப்பார்கள் என்றும் அந்த வளையத்தில் முதலீட்டாளர்களை சிக்கும் வைக்கும் அளவுக்கு அந்தப் பெண் மிகவும் இனிமையாக பேசுவார் என்றும் அதன் காரணமாக பலர் ஏமாந்து உள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 செயலற்று போகும் கணக்குகள்

செயலற்று போகும் கணக்குகள்

அந்த பெண்ணின் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்தவர்களின் கணக்கு திடீரென செயலற்றுப் போகும் என்றும் அந்த பணத்தை மோசடியாளர்கள் எடுத்துக் கொண்டு அதன் பின் முதலீட்டாளர்களை தொடர்பு கொள்வது இல்லை என்றும் முதலீட்டாளர்கள் தொடர்பு கொண்டாலும் பதில் அளிப்பதில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டுபிடிப்பது மிகவும் கடினம்

கண்டுபிடிப்பது மிகவும் கடினம்

தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்ததும் இதுகுறித்து புகார் கொடுத்தாலும் எந்தவிதமான பலனும் இருக்காது என்றும் அதற்குள் அந்த மோசடியாளர்கள் போலி இணையதளத்தை நீக்கிவிட்டு வேறு புதிய இணையதளத்தை தொடங்கி விடுவார்கள் என்றும் அதனால் அவர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. எனவே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதே ரிஸ்க் என்ற நிலையில் போலியான கிரிப்டோகரன்சி இணையதளங்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் முதலீட்டாளர்கள் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.1000 crore off Indian users by posing in Crypto scammers

Rs.1000 crore off Indian users by posing in Crypto scammers | கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் இழந்தது இத்தனை ஆயிரம் கோடியா?

Story first published: Wednesday, June 22, 2022, 10:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.