கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் மீது மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
நிலமேல் பகுதியை நோக்கி சென்ற டிப்பர் லாரி, கடைக்கல் அருகே வந்த போது ஓட்டுநர் திடீரென மயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அடுத்தடுத்து 2 கார்களின் மீது மோதி இழுத்துச் சென்று மின்கம்பத்தில் இடித்து நின்றது.
இதில் ஒரு கார் முழுவதுமாக உருக்குலைந்த நிலையில், கார்களில் இருந்த 4 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். லாரி ஓட்டுநரும் காயமடைந்த நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.