“சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு” என முழக்கமிட்டு வெளியேறினார் ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.
Heavy-traffic-congestion-has-occurred-on-the-Maduravayal-Vanakaram-road-where-the-AIADMK-general-body-meeting-is-being-held
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்தனர். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.
AIADMK-General-Council--No-resolutions---only-discussion-on-unitary-leadership-
கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் அடைந்தனர்.
General-Council-rejects-23-resolutions---CV-Shanmugam--KP-Munuswamy-announcement-
அடுத்து பேசிய கே.பி. முனுசாமியும் இதே அறிவிப்பை மேடையில் வெளியிட்டு, ஒற்றை தலைமை தீர்மானம் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அப்போது மேடையில் இருந்து எழுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் “இது சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு” என்று முழக்கமிட்டனர். இதையடுத்து வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவை விட்டு வெளியேறினார் ஓ.பி.எஸ்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.