சாதகமான தீர்ப்பு கிடைத்ததால் ஓபிஎஸ் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு இன்று அதிகாலை விசாரித்தது.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
சாதகமான தீர்ப்பு அமைந்ததால் ஓபிஎஸ் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: ஓபிஎஸ்க்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு… அதிமுக பொதுக்குழுவில் என்ன நடக்கும்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM