சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, காதலியை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், பார்த்திபன். இந்திய வம்சாவளியான இவருக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் சிங்கப்பூர் வந்து அந்த பெண்ணுடன் இரண்டு மாதங்கள் வசித்துள்ளார். அதற்குள் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குடித்து விட்டு, அந்தப் பெண்ணை பார்த்திபன் அடித்து உதைத்துள்ளார். கத்தியை கழுத்தில் வைத்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார். யாருடனும் பேசக்கூடாது என மிரட்டிய அவர், அந்த பெண்ணின் மொபைல்போனை உடைத்து, ‘சிம் கார்டை’ தின்றுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் படி, போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். வழக்கு நடத்தப்பட்டு, ஏழு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
Advertisement