Shubman Gill Tamil News: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் லீசெஸ்டர்ஷைர் கிளப் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டது. அதன் ஒரு சிறிய வீடியோவில், சுப்மான் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்வது காட்டப்பட்டது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கேப்டன் ரோகித்துடன் பெரும்பாலும் ஓபன் செய்யவுள்ள கில், அவர் ஒரு டிரைவ் ஆடுவதை பிரமிப்புடன் பார்த்தார். அவர் மீண்டும் ஸ்ட்ரோக்கை எடுக்க முயன்றார், ஆனால் பந்து அவர் எதிர்பார்த்தது போல் போடப்படவில்லை. அப்படியே சிந்தித்துக்கொண்டிருந்த கில், தலையைக் குலுக்கி, ஓரிரு வினாடிகள் சர்மாவைக் கவனிக்கிறார். பின்னர் தானே டிரைவ் அடிக்க முற்படுகிறார்.
இரண்டு வெவ்வேறு விளைவுகளை உருவாக்கிய சுப்மன் கில்லின் அந்த ட்ரைவ் தான் அவரது டெஸ்ட் வாழ்க்கையையும் சுருக்கமாகக் கூறுகிறது. கில் தற்போது வரை 19 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். அவர் களம் புகுந்த நேரத்தில், நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், வீர நடையிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டின் கடுமையான தாக்கம் அவரை பாதிக்கவில்லை. எதற்கும் துணிந்த வீரராய் பந்துகளை சந்தித்தார்.
அவரிடம் தயக்கம் இல்லை, தற்காலிக ஃபார்ம் அவுட் இல்லை, சுய சந்தேகம் இல்லை. ஆயினும்கூட, அவரது கிரிக்கெட் வாழ்க்கை நிலையானது என்பதை விட, தொடக்க நிலையாக இருந்தது. ஒருபுறம் அவரை காயங்கள் துரத்தின. அந்த நேரத்தில் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தினர். ஆனாலும், கிடைத்த வாய்ப்புகளின் போது, இரட்டை இலக்க ரன்களை (அரைசதங்களை) விளாசி மூன்று இலக்கங்களாக மாற்றினார். அவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 91 ரன்கள் அடித்து, இத்திய அணிக்கான ரன்களை குவித்தார். ஆனால், அவர் 9 ரன்கள் எடுக்கமால் ஆட்டமிழந்தது அவரை நொறுங்கிப் போகச் செய்தது. அந்த தவறுக்காக அவர் தன்னை தானே சபித்துக் கொண்டார்.
அதன்பிறகான ஆட்டங்களில் ஒவ்வொரு முறையும் அவர் அரை சதம் அடித்திருந்தாலும், அவர் அவுட் ஆகினார். அந்த அவநம்பிக்கையான ஏளனமும், வானத்தை நோக்கிய ஒரு வெறுத்த பார்வையும், பெவிலியனுக்குத் திரும்ப கூடாது என்கிற நடையும் அவரிடம் இன்னும் இருக்கிறது. பயிற்சி ஆட்டநேரங்களில் பெரும்பாலும் அவர் நேராக வீடியோ பகுப்பாய்வாளரிடம் நடந்து செல்வதைக் காணலாம். ரிசர்வ் பந்துவீச்சாளர்களிடமிருந்து த்ரோ டவுன்களை எடுத்து கொள்வதையும் நீங்கள் காணலாம். சில ஆட்டங்களாக அவர் அடிக்க முடியாத அந்த டெஸ்ட் சதத்திற்காக ஏங்கியுள்ளார். அது அவரை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. அவர் இரண்டாவது தேர்வு தொடக்க வீரராக அணிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வித்தியாசத்தை வலியுறுத்துவதற்குப் பதிலாக, அவருக்கான நிரந்தரம் கிடைக்க உழைப்பதையும் பார்க்க முடிகிறது.
ஆனால், அதற்கான காலம் இப்போது கனிந்துவிட்டது என்று கூறலாம். சுப்மான் கில் தற்போது ஐபிஎல்-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கையுடன் டெஸ்டிற்கு வந்துள்ளார். இது அவருக்கு மிகவும் வெற்றிகரமான ஒன்று (34 ரன்களில் 483 ரன்கள்) மட்டுமல்ல, அவர் மிகவும் பிரபலம் மிக்கவராகவும் இருந்தார். அதில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலவே பேட் செய்தார். டி20 கிரிக்கெட்டில் தனது அடிப்படை விளையாட்டை சேதப்படுத்தாமல் பேட்டிங் செய்யும் ஃபார்முலாவைக் அவர் தற்போது கண்டறிந்துள்ளார். ஆனால் டி20 கோரும் வேகத்தில் (132 ஸ்ட்ரைக் ரேட்), பல்வேறு சூழ்நிலைகளை கையாள்வதில் அவர் ஒரு தலைசிறந்த தன்மையை வெளிப்படுத்தினார்.
பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் 59 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். “அவர் இங்கே இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். அவரது நம்பிக்கை ஒட்டுமொத்த அணியையும் ஊக்கப்படுத்தியுள்ளது. இது நாம் அனைவரும் பார்க்க விரும்பும் சுப்மான் கில். அதுவே இந்த சீசனின் முதல் ஆட்டமாகும், மேலும் கில்லின் கடைசி போட்டியான இறுதிப் போட்டி வரை ஃபார்மைத் தக்க வைத்துக் கொண்டார். அதில் அவர் 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்” என்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஹோஸ்ட் ஒளிபரப்பாளர்களிடம் கூறியிருந்தார்.
சுப்மான் கில் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி , “அவர் ஒரு திறமையானவர். நேர்மையாகச் சொல்வதானால், இந்த நாட்டிலும் உலக கிரிக்கெட்டிலும் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் அந்த பையன். அவர் சென்றவுடன் அவர் ஸ்கோர் செய்வார் மற்றும் அவர் அதை எளிதாக்குவார். அவருக்கு அந்த பஞ்ச் கிடைத்துள்ளது, அவருக்கு நேரம் கிடைத்துள்ளது மற்றும் மைதானத்தில் பந்துகளை பந்தாடும் சக்தி அவருக்கு கிடைத்துள்ளது, ”என்று அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியிருந்தார்.
ஆனால், அவருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது. பந்துவீச்சில் எழுச்சி கண்டுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோருக்கு எதிராக அவர் ஒரே ஒரு டெஸ்ட் தான் விளையாடி இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் அவரது ஒரு டெஸ்ட் ஆட்டம் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். அது அவருக்கு மறக்க முடியாததாக இருந்தது. அப்போது அவரது இரண்டு பலவீனங்களும் வெளிப்பட்டது. அவர் அடிக்கடி லெக் ஸ்டம்பில் இருந்து விளையாடுவதால், அவர் பந்தின் லெக்-சைடு விளையாடுவதை முடித்துக்கொள்கிறார். இதனால் அவர் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே ஆடுவதில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது. அவர் கிரீஸில் வலுவாக இருக்க முனையும் போது, அவர் சில சமயங்களில் கிரீஸில் இருந்தோ அல்லது கீழே இறங்கி ஆடுவது, இங்கிலாந்தில் தன்னைத்தானே வலையில் சிக்கிக்கொள்ள வழி வகுக்கும்.
அவர் கிரீஸில் அமைக்கப்பட்டுள்ள விதம், ஆன்-தி-அப் பஞ்ச் அல்லது பிரஸ்-பேக் எளிதாக வருகிறது. முன் பாதத்திற்கு எடை பரிமாற்றம் அவ்வளவு எளிதில் வராது மற்றும் அவரை மோசமான நிலைகளுக்கு இழுத்துச் செல்கிறது.
இதன் விளைவாக, அவர் அடிக்கடி ஸ்விங் செய்யப்பட்ட பந்தால் தொந்தரவு செய்யப்பட்டார், தடுமாற்றம் அடைந்தார். மேலும் அவர் ஃபிளிக் பார்க்கும்போது தனது முன் பாதத்தை சுற்றி விளையாடும் போக்கு உள்ளது. பந்து தாமதமாக ஆடும் இங்கிலாந்தில் குறைபாடு பெரிதாக்கப்படுகிறது.
அந்தக் குறைபாடுகளை அவர் எவ்வாறு தீர்க்கிறார் என்பது இறுதியாக அவர் தனது சதத்தைக் கொண்டு வந்து தனது திறமைக்கு ஏற்ற அணியில் நிரந்தர இடத்தைப் பெறுவாரா என்பதை தீர்மானிக்க முடியும். அவர் அடிக்கும் அந்த கவர்-டிரைவ் அவரை உருவாக்கும் அல்லது அவரை உருவாக்காத பதமாக இருக்கலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil