டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வரின் மனைவி 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பி.பி.இ. எனப்படும் முழு உடல் கவச உடைகள் வாங்கியதில் மோசடி நடந்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த மோசடியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு ஹிமந்த பிஸ்வா சர்மா மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் முழு கவச உடை ஒப்பந்தம் தனக்கு அளிக்கப்படவில்லை என்றும் 1,485 கவச உடைகளை நன்கொடையாகத் தான் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: அரசு இல்லத்தை காலி செய்தார் உத்தவ் தாக்கரே… உணர்ச்சிகரமாக பேசி வீடியோ வெளியீடுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM